உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதத்தை விளாசியுள்ளார் தென்னாப்பிரிக்க வீரர். இன்று இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் மார்க்ரம் 49 பந்துகளில் 100 ரன்களை கடந்து வரலாறு படைத்தார். இந்த இன்னிங்ஸில் மொத்தம் 54 பந்துகளை விளையாடிய மார்க்ரம் 14 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 106 ரன்கள் எடுத்தார். இந்த வரிசையில், அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் (50 பந்துகள்) வைத்திருந்த சாதனையை மார்க்ரம் முறியடித்தார்.