சாமந்தி வளர்ப்பில் பராமரிப்பு அவசியம் வேண்டும். முதலில் சாமந்தி விதைத்து, வேர் பிடித்தவுடன் பெரிய தொட்டியில் மாற்றி வைக்க வேண்டும். இதனை தொடர்ந்து அவசியம் காலை, மாலை என இரு வேளை தேவையான அளவு சாமந்தி செடிக்கு நீர் ஊற்றவும். வேப்ப இலையை காய வைத்து அரைத்து தூள் செய்து கொள்ள வேண்டும். இதை வாரம் ஒரு முறை செடியின் வேர் பகுதியில் போட்டு மண்ணை நன்கு கொத்தி விடுதல் அவசியம் என்று கூறப்படுகிறது. இப்படி செய்தால் அதிகளவிலான அழகிய சாமந்தி பூ கிடைக்கும்.