பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற துப்பாக்கிச் சுடுதல் வீரங்கனை மனு பாக்கர் இன்று (ஆக.9) நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். பதக்கங்களுடன் கடந்த 7ஆம் தேதி நாடு திரும்பிய அவருக்கும் அவரது பயிற்சியாளர் ஜஸ்பால் ராணாவுக்கும் உள்ளூர் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.