முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் வலுவான புத்திசாலித்தனம் கொண்ட ஒரு தலைவர். அவர் இந்திய நிதியமைச்சராக பதவி வகித்தகாலம், தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்தியது. இந்தியாவின் சீர்திருத்தங்களின் தொடக்கத்திற்கு வழி வகுத்தது. தமிழக பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்” என்றார்.