முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் நாளை (டிச.28) காலை 9.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை காலை 8.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, அங்கிருந்து இறுதி ஊர்வலம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மன்மோகன் சிங்கின் உடல், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.