உ.பி., பாஜக அமைச்சராக இருக்கும் அசிம் அருண் 1994-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவருடைய சிறப்பு பாதுகாப்பு பிரிவில் 3 ஆண்டுகள் பணியாற்றினார். மன்மோகன் சிங்கின் நிழல் போல இருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவரிடம் மன்மோகன் அடிக்கடி BMW காரில் செல்ல விரும்பவில்லை என்றும், மாருதி 800 கார் மீது அவருக்கு அதீத பிரியம் இருந்ததாகவும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.