மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையான மெய்தி சமூகத்தினருக்குப் பழங்குடியினர் (ST) அந்தஸ்து கோரிய விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இவர்களுக்குப் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க குகி பழங்குடியினர் எதிர்த்தால் வெடித்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது மெய்தி சமூகத்தினரை எஸ்.டி. பட்டியலில் சேர்க்க பரிசீலனை செய்யும்படி முன்னர் பிறப்பித்த உத்தரவை மணிப்பூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வின் நிலைப்பாட்டுடன் முரணாக இந்த உத்தரவு உள்ளதாக கூறப்படுகிறது.