இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து தீபிகா படுகோன் வெளியேறியது கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு நாளைக்கு 8 மணி நேர ஷிஃப்ட் என்ற நிபந்தனையை அவர் முன் வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் 'தக் லைஃப்' பட ப்ரமோஷனில் கலந்து கொண்ட இயக்குநர் மணிரத்னம், "தீபிகாவின் கோரிக்கை நியாயமானது என நினைக்கிறேன். அதைக் கேட்கும் நிலையில் தீபிகா இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என கூறி உள்ளார்.