இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராபோர்ட் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப், இங்கிலிஷ் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடுகிறது. உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்பிற்கு, இந்தியாவில் மட்டும் சுமார் 3.5 கோடி ரசிகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 'மான்செஸ்டர் யுனைடெட்' கால்பந்து கிளப், சென்னையில் பயிற்சி மையம் அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.