மணத்தக்காளி கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வாய்ப்புண், வயிற்றுப்புண்களை குணமாக்கும் இந்த கீரை செரிமான நன்மைகளுக்கு பெயர் பெற்றது. மணத்தக்காளி கீரையில் அதிக வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தோல் மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மணத்தக்காளியை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து சாப்பிட்டு வந்தாலும் நோய்கள் நீங்கி உடல் வலிமை பெறும்.