புதுக்கோட்டை மாவட்டத்தில் தனது 100 வயது வரை பனைமரம் ஏறி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்த முதியவர் உயிரிழந்துள்ளார். கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்லையா என்ற முதியவர், தனது 101ஆவது வயதில் இன்று (மே 15) காலமானார். இவர், தனது கடைசி காலம் வரை உழைக்கவேண்டும் என்று வாழ்ந்து வந்துள்ளார். முதியவரின் மறைவு, அப்பகுதியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.