மாணவியை காதலிக்கச் சொல்லி தாக்கிய ஆசாமிக்கு வலைவீச்சு

65பார்த்தது
மாணவியை காதலிக்கச் சொல்லி தாக்கிய ஆசாமிக்கு வலைவீச்சு
சென்னை ராயப்பேட்டையில் நடுரோட்டில் பள்ளி மாணவியிடம் காதலிக்கச் சொல்லி மிரட்டி, முடியைப் பிடித்து தாக்கிய அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். மாணவியை நடுரோட்டில் தாக்கியதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், சூர்யா என்ற  இளைஞரை பிடிக்க முயற்சிக்கும் போது அவர் தப்பி ஓடினார். அண்மையில் காரில் மது விற்ற வழக்கில் கைதான சூர்யா (18) ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தனது மாமா அதிமுக வட்ட துணைச் செயலாளரின் பெயரைச் சொல்லி அப்பகுதியில் மாமூல் வசூலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி