ஜெர்மனியைச் சேர்ந்த விண்வெளி பொறியாளர் ருடிகர் கோச். 59 வயதாகும் இவர் பனாமா கடலுக்குள் 30 சதுர மீட்டர் கொண்ட கேப்ஸ்யூல் பானியில் உருவாக்கப்பட்ட வீட்டில் 120 நாட்களாக வசித்து உலக சாதனையை படைத்துள்ளார். இந்த கேப்சூல் வீட்டில் ஒரு படுக்கை, கழிப்பறை, டிவி, கணினி, இணையம், உடற்பயிற்சிக்கு தேவையான இயந்திரம் உட்பட பெரும்பாலான அம்சங்கள் இருந்தன. மேற்பரப்பில் சோலார் பொருத்தப்பட்டு அவை மூலம் வீட்டுக்கு தேவையான மின்சாரம் வழங்கப்பட்டது.