3வது மாடியில் பெயிண்ட் அடித்த நபர் தவறி விழுந்து பலி

53பார்த்தது
3வது மாடியில் பெயிண்ட் அடித்த நபர் தவறி விழுந்து பலி
சென்னை நொளம்பூர் அருகே புதிதாக மூன்றடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அங்கு உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜும்மா (35) என்பவர் பெயிண்ட் அடிக்கும் வேலையை செய்து வந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக 3வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட சக பணியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜும்மா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி