பாம்பு, மலைப்பாம்புகளை கண்டாலே பலர் பயந்து ஓடுகின்றனர். மேலும் மலைப்பாம்புகள் மனிதர்களை உயிருடன் விழுங்கக்கூடியவையாகும். இவ்வளவு பெரிய மலைப்பாம்பை ஒரு மனிதன் வளர்த்து வருகிறார். மேலும், குளியலறையில் மலைப்பாம்புடன் குளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது துணிச்சலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். மற்றவர்கள் இதுபோன்ற ஆபத்தான உயிரினங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றனர்.