இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், டொயோட்டா மின்சார கார் முன்பாக அமர்ந்த இளைஞர் ஒருவர், அதனுடன் மின்சார அடுப்பை இணைத்து சமையல் செய்வது இடம்பெற்றுள்ளது. வீட்டில் சமைப்பது போல மின்சார காரில் பூரி சுடுகிறார். இந்த வீடியோ குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில் அது ராஜஸ்தானில் பதிவு செய்யப்பட்ட வீடியோ என்பது தெரியவந்துள்ளது. தற்போது இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.