பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீதான தாக்குதலில் சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்று (ஜன 18) சத்தீஸ்கரின் துர்க்கில் ரயில்வே போலீசாரால் அவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸில் பயணித்தபோது கைது செய்யப்பட்டார், மேலும் வீடியோ கால் மூலம் மும்பை காவல்துறையினரிடம் பேசிய பிறகு அவர் அதே நபர் என்பது உறுதி செய்யப்பட்டது. குற்றவாளியை அழைத்து வர மும்பை காவல்துறை சத்தீஸ்கர் சென்றுள்ளனர்.