மேற்கு வங்கத்தின் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட வக்பு (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் வன்முறை வெடித்தது.
இந்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி புதன்கிழமை மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த இமாம்கள் மற்றும் மதத் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்தச் சட்டத்தை எவ்வாறு எதிர்ப்பது என்பது குறித்த முழு செயல்திட்டத்தை தயாரிப்பதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.