வங்கதேச வீரர் தமீம் இக்பால் விரைவில் குணமடைய மலிங்கா வாழ்த்து

73பார்த்தது
வங்கதேச வீரர் தமீம் இக்பால் விரைவில் குணமடைய மலிங்கா வாழ்த்து
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பால் இன்று (மார்ச். 24) உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு அவரின் இதயத்தில் அடைப்பை உறுதி செய்த மருத்துவர்கள் அதற்கான தகுந்த சிகிச்சையை அளிக்கின்றனர். இந்நிலையில் இலங்கை ஜாம்பவான் மலிங்கா, இக்பால் விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி