அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து விருத்தாசலம் நகர்மன்றக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கவுன்சிலர் சேகர், சேலை கட்டி வந்து நூதன முறையில் போராட்டம் நடத்தினார். மேலும் அவர், ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், 'யார் அந்த சார்?' என்ற பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினரை கண்டித்தும் அவர் இந்த போராட்டத்தை நடத்தினார்.