மலையாள இலக்கியம் தன் மாணிக்கங்களுள் ஒன்றை இழந்துவிட்டது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மலையாள இலக்கியத்துக்கு நவீன வாழ்க்கையையும் மலையாளத் திரைக்கு
நவீன மொழியையும் கற்பித்தவர் எம்.டி. அவர் எனக்குத் தந்த ஒரு பேனாவை இதுவரை
எழுதப் பயன்படுத்தி வந்தேன்; இனி அவர் நினைவாகப் பத்திரமாய்ப் பாதுகாப்பேன். போய் வாருங்கள் எம்.டி. உடல் மறையும்; உணர்வுகள் மரிப்பதில்லை என கூறியுள்ளார்.