BSF கூடுதல் டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்

60பார்த்தது
BSF கூடுதல் டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்
தமிழகக் காவல்துறையின் ஆயுதப்படை டிஜிபியாக பணியாற்றி வந்த மகேஷ்குமார் அகர்வால் எல்லைப் பாதுகாப்புப் படை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதல் டிஜிபியாக 4 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு ஏடிஜிபியாக பணியாற்றிய மகேஷ்குமார் அகர்வால், கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு ஆயுதப்படை ஏடிஜிபியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி