மகாராஜாவை நீங்கள் எந்தளவுக்கு நேசித்தீர்கள் என்பதை அறிந்து மகிழ்ந்தேன் என மகாராஜா படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், இந்த சந்திப்புக்கு நன்றி. கோலிவுட்டின் தங்கக் கரங்களில் இருந்து வாழ்க்கை, அனுபவம், வாழ்க்கை முறையைப் பற்றிய புரிதல் பற்றிய நாவலைப் படிப்பது போல் இருந்தது. உங்கள் விருந்தோம்பல் மற்றும் பணிவு கண்டு நான் வியப்படைகிறேன் என பதிவிட்டுள்ளார்.