உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயக்கீரை கட்லெட்
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, வெந்தயக்கீரை, தயிர், உப்பு எண்ணெய், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் அரவையை சேர்த்து வட்டமாக தட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைக்க வேண்டும். பின்னர் வாணலியில் கடுகு தாளித்து, தேங்காய் துருவலுடன் கட்லெட்டுகளை போட்டு கிளறி எடுக்க வேண்டும். இது குழந்தைகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. உடலுக்கு குளிர்ச்சியும் சக்தியும் அளிக்கும்.