உசிலம்பட்டி: பாம்பு கடித்து பெண் பலி

55பார்த்தது
உசிலம்பட்டி: பாம்பு கடித்து பெண் பலி
உசிலம்பட்டி அருகே பாம்பு கடித்து பெண்மணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டார்மங்கலம் அய்யம்பட்டியில் வசிக்கும் முத்து மற்றும் அவரது மனைவி வளர்மதி (50) ஆகியோர் அருகே உள்ள சக்கிலியன்குளத்தில் ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ளனர். இவர்கள் தினமும் அங்கு சென்று தோட்ட வேலை கவனிப்பது வழக்கம்.

அதுபோல நேற்று (செப்.,30) காலை கணவன், மனைவி இருவரும் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த பொழுது பாம்பு கடித்ததில் வளர்மதி மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (செப்.,30) மாலை வளர்மதி உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மகன் பிரேம்குமார் வாலாந்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி