தமிழ்நாடு வாகன புகை பரிசோதனை மையங்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
மதுரை 19- தமிழ்நாடு முழுவதும் 350புகை பரிசோதனை மையங்கள் உள்ளன இவற்றில் சுமார் 50 மையங்கள் வருமான இல்லாத நிலையில் மூடப்பட்ட உள்ளது. தொடர்ந்து நஷ்டத்தில் மற்ற மையங்கள் இயங்கிவருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வாகன் மூலம் ஆன்லைன் லில் சான்று வழங்க அனைத்து மையங்கள் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக போக்குவரத்து ஆணையர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில் சுமார் 1500பெட்ரோல் பங்கு களிலும் 1500 கார் மற்றும் இரண்டு சக்கர விற்பனை மையங்களில் வாகன புகை பரிசோதனை மையங்கள் அமைக்கவேண்டும் என கட்டாய படுத்தி அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு டார்க்கெட் கொடுத்து குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து வாகன புகை பரிசோதனை இயந்திரம் வாங்க நிர்பந்தம் செய்கிறார்.
தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக அந்த குறிப்பிட்ட TEDI Pvt ltd நிறுவனங்களிருந்து ரிப்ளக்டிவ் ஸ்டிக்கர், வேக கட்டுப்பாடு கருவி, சிசிடிவி கேமரா, ஜிபி ஆர் எஸ் பொருத்த வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது போக்குவரத்து ஆணையர் தென்காசி ஜவஹர் ஐ ஏ எஸ் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்று கொண்டு போலியான வேக கட்டுப்பாடு கருவி சிசிடிவி கேமரா ஜிபி ஆர் எஸ் ஸ்டிக்கர் பொருத்த கட்டாய படுத்துகிறார் என தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் தமிழக போக்குவரத்து ஆணையர் சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அனைத்து வாகன புகை பரிசோதனை மையங்கள் 27-12-2020 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மதுரையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தலைவர் ராமகிருஷ்ணன் பொதுசெயலாளர் ராஜசேகரன் பொருளாளர் நந்தகோபால் துணை செயலாளர் சங்கர் துணை தலைவர் தர்மலிங்கம் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் தனியார் புகை பரிசோதனை இயந்திரங்கள் உற்பத்தி நிறுவனங்கள் MARS PVT, AVL PVT, I3YS PVT, NETTAL PVT, கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.