மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காளப்பண்பட்டியைச் சேர்ந்த ராமன் மகன் சுதாகரன் (33) என்பவர் கீழப்புதூரில் மின்சாரம் பழுது பார்ப்பதற்காக இரும்பு போஸ்ட் கம்பி மீது இன்று (டிச. 25) ஏறி வேலை பார்த்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலேயே தொங்கியபடி உயிரிழந்தார். இதனை அறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்துகின்றனர்.