மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பேரையூர் மள்ளபுரத்தில் வசிக்கும் ரஞ்சித்திற்கு செல்வி (33) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. செல்விக்கு வயிற்று வலி இருந்துள்ளது.
இதற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (டிச. 28) செல்வி கணவர் மற்றும் மகன் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த எம்.கல்லுப்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.