மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள அய்யனார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ. ஆண்டிபட்டி கிராமத்தில் திருமங்கலம் பாசன கால்வாய் 98-வது மடையில் சுமார் 250 ஏக்கர் நெல் விவசாயம் செய்துள்ளனர். இதில் 200 ஏக்கருக்கு மேல் நெல் விளைச்சல் ஆகும் முன்பு தற்போது வீசிய புயல் சூறாவளி காற்று மழையால் நெற்கதிர்கள் பால் பிடிக்காமல் வயலில் சாய்ந்து விட்டது.
இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.