உசிலம்பட்டி: நெற்பயிர்கள் நாசம்; விவசாயிகள் வேதனை

81பார்த்தது
உசிலம்பட்டி: நெற்பயிர்கள் நாசம்; விவசாயிகள் வேதனை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள அய்யனார்குளம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆங்காங்கே குலை நோய் தாக்குதலுக்கு உள்ளான நெல்பயிர்கள் கதிர்விடும் பருவத்திலேயே கருகி, காய்ந்த நிலையில் காணப்படுகிறது.

குலை நோய் தாக்கம் ஏற்படும் போதே மூன்று முதல் 5 முறை மருந்து தெளித்தும் எந்த பயனுமில்லை. இந்த கிராமத்தில் மட்டும் சுமார் 50 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல்பயிர்கள் இந்த குலை நோய் தாக்குதலுக்கு சேதமடைந்துள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதற்கு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் கிடைக்கும் வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி