மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள உத்தப்ப நாயக்கனூர், அய்யனார் குளத்தை சேர்ந்த அறிவு (55) என்பவர் பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள செல்லக்கண்ணு என்பவரின் தோட்டத்தில் நேற்றுமுன்தினம் (பிப் 2) பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதில் அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.