மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் – சந்தனமாரியம்மன் திருக்கோவில் சிறிய வடிவில் இருந்த இந்த கோவிலை 75 ஆண்டுகளுக்கு பின் புரணமைக்கப்பட்டு, 71 அடியில் இரு கோபுரங்களுடன் கோவில் ஏழுப்பி நேற்று (ஜூன் 1) கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கியது. ஐந்து கால யாக பூஜைகள் செய்து பூர்ணாவதி யாகம் முடிவுற்ற பின் கடம் புறப்பாடாகி, கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
தொடர்ந்து மூல ஸ்தானத்தில் உள்ள முத்தாலம்மன் பீடத்திற்கும், சந்தனமாரியம்மன் சிலைக்கும் புனித நீரால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.