உசிலம்பட்டி: கல்லூரி மாணவி மாயம்

65பார்த்தது
உசிலம்பட்டி: கல்லூரி மாணவி மாயம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியப்பட்டி கிழக்கு தெருவில் வசிக்கும் மாசு என்பவரின் 17 வயது மகள் பெரியகுளத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பி. காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 15ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் அக்கம் பக்கத்திலும் உறவினர் இல்லங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதனல் நேற்று அவரது தந்தை மாசு உசிலம்பட்டி தாலூகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி