உசிலம்பட்டி: தெரு நாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் பலி.

62பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வில்லாணியைச் சேர்ந்த செல்லமாயன் என்ற விவசாயி தனது தோட்டத்து பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்று (டிச. 22) மதிய வேளையில் வீட்டிற்கு சாப்பிட சென்றுவிட்டு திரும்பி வந்த போது தோட்டத்தில் நாய்களின் சத்தம் அதிகமாக கேட்டதால் ஓடி வந்து பார்த்த செல்லமாயன் தோட்டத்தில் இருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததில் துடிதுடித்து இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
5 ஆடுகளை கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்த சூழலில் 1 ஆடு உயிருக்கு போராடி கொண்டிருந்த சூழலில் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

மேலும் இதே போல் லிங்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பூங்கொடி என்பவரின் தோட்டத்தில் கட்டி வைத்திருந்த பிறந்து 4 நாட்களே ஆன கன்றுக் குட்டியையும் இந்த நாய் கூட்டம் கடித்து குதறியதில் படுகாயமடைந்து துடிதுடித்து இறநதுள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி