பட்டாசு வெடித்து டிஐஜி கார் கண்ணாடி உடைந்ததால் இருவர் கைது

1528பார்த்தது
பட்டாசு வெடித்து டிஐஜி கார் கண்ணாடி உடைந்ததால் இருவர் கைது
மதுரை மாவட்டம் கருமாத்தூர் பகுதியில் பட்டாசு வெடித்ததில் டி. ஐ. ஜிகார் கண்ணாடி உடைந்தது குறித்து இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னையில் டி. ஐ. ஜி. யாக இருக்கும் திருநாவுக்கரசு என்ற காவல் துறை அதிகாரி மதுரையில் இருந்து சொந்த ஊரான தேனிக்கு அரசு வாகனத்தில் சனிக்கிழமை சென்றபோது கருமாத்தூர் அருகே
கரிசல்பட்டியைச் சேர்ந்த செல்வபாண்டியின் இல்ல விழாவையொட்டி அந்தப் பகுதியில் பட்டாசு வெடித்தபடி உறவி னர்கள் சீர் கொண்டு சென்ற போது, அந்த வழியாகச் சென்ற டி. ஐ. ஜி. திருநாவுக்கரசின் காரின் முன் பகுதியில் பட்டாசு விழுந்து வெடித்ததில் முன்பக்கக் கண்ணாடி சேதமடைந்தது. இதில் நல்வாய்ப்பாக டி. ஐ. ஜி. திருநாவுக்கரசு காயங்களின்றி தப்பினார்.

இதுகுறித்து மதுரை தெற்கு வாசல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (31), சதீஷ் பாண்டி (38) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி