உசிலம்பட்டி அருகே சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு.

63பார்த்தது
உசிலம்பட்டி அருகே சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொது மக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ. புதுப்பட்டி கிராமத்திலிருந்து ஏ. கிருஷ்ணாபுரம், காக்கிவீரன்பட்டி, காமாட்சிபுரம் கிராமங்களுக்கு குடிநீர் குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த குடிநீர் குழாய் தனது பட்டா இடத்திற்கு செல்வதாக ஏ. புதுப்பட்டியைச் சேர்ந்த ராஜாகிளி என்பவர் குழாயை அடைத்து வைத்துவிட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த மூன்று கிராமங்களுக்கும் முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும், தனிநபர் இடத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாய் வழியாக சென்று கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி இந்த மூன்று கிராம மக்களும் காலி குடங்களுடன் பாப்பாபட்டி – உசிலம்பட்டி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி தாலூகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இதனால் அப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி