சாலையில் தவறி விழுந்தவர் பலி.

64பார்த்தது
சாலையில் தவறி விழுந்தவர் பலி.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலையில் தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காவனம்பட்டியை சேர்ந்த அய்யாவு மகன் பாண்டி (51) என்பவரும் அவரது மனைவி பாக்கியம் என்பவரும் எஸ்டிஏ பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பாண்டி மதுவுக்கு அடிமையானவர். இதனால் உடல் நிலை சரியில்லாமல் போனதால் தேனி கானா விளக்கு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 3 மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த 2ம் தேதி நந்தவன தெரு காமன் சலூன் கடை அருகே நடந்து சென்ற போது திடீரென கீழே விழுந்தவரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்த பிறகு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி