சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

82பார்த்தது
சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
மதுரை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் ஏழுமலை கோபாலபுரத்தை சேர்ந்த கருப்பையா என்பவரின் 17 வயது மகள் அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் கார்த்திக் (24) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து இந்திரா நகரில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து சேடப்பட்டி ஒன்றிய சமூக நல அலுவலர் பாண்டியம்மாள் என்பவருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாண்டியம்மாள் புகார் செய்தார்.

அவரின் புகாரின் பேரில் ஆய்வாளர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த கார்த்திக் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி