எழுமலை அருகே பள்ளி மாணவி மாயம்.

61பார்த்தது
எழுமலை அருகே பள்ளி மாணவி மாயம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவி மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த பரமன் மகள் அர்ச்சனா (19) என்பவர் பிளஸ் டூ படித்து வருகிறார். இவர் கடந்த 2ம்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஆகவே அவரது தாய் முத்துமாரி எழுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி