பள்ளியின் சுற்று சுவரில் தலைவர்களின் படங்கள்.

68பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அரசு பள்ளியின் சுற்று சுவர்களில் தலைவர்களின் படத்தை வரைய ஏற்பாடுகளை செய்த திமுக நிர்வாகிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமாக மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் சுவர்களில் இருந்த வர்ணங்களை சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது, இதனை அறிந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், தனது சொந்த செலவில் பள்ளி கட்டிடங்களுக்கு வர்ணம் பூச முன் வந்து கடந்த சில தினங்களுக்கு முன் பணிகளை துவக்கி வைத்தார்.


சுமார் 2 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடங்களுக்கு வர்ணம் பூசியதுடன், மாணவ மாணவிகள் நாட்டின் தலைவர்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் மகாத்மா காந்தி, நேரு, பகத்சிங், கலாம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் புகைப்படங்களை தத்துருபமாக ஓவியர் மூலம் வடிவமைத்தது பள்ளி கட்டிடத்தை மேலும் அழகாக மாற்றியுள்ளது.

தலைவர்களின் புகைப்படங்களுடன் புத்தம் புதிதாக காட்சியளிக்க தனது சொந்த செலவில் வர்ணம் பூசி கொடுத்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி