கருமாத்தூர் சாலை விபத்தில் ஒருவர் பலி.

65பார்த்தது
கருமாத்தூர் சாலை விபத்தில் ஒருவர் பலி.
மதுரை அருகே லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம், கோவி லாங்குளம் ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த காக்குவீரன் மகன் விஜயராஜ் (19) என்பவர் அந்தப் பகுதி யில் உள்ள தனியார் கல்லூரியில் ஐடிஐ படித்து வந்தார்.

இந்த நிலையில், இவர் தனது நண்பரான ரமேஷுடன் டூவீலரில் மதுரை- தேனி நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு
கருமாத்தூர் விலக்கு பகுதியில் சென்ற போது பின்னால் வந்த லாரி இவர்கள் மீது மோதி யது. இதில் பலத்த காயமடைந்த விஜயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து செக்கானூரணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி