உசிலம்பட்டி சாலை விபத்தில் மூதாட்டி பலி.

55பார்த்தது
உசிலம்பட்டி சாலை விபத்தில் மூதாட்டி பலி.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி மெயின் ரோட்டில் அய்யனார் பேக்கரி அருகில் கடந்த 18ம் தேதியன்று உசிலம்பட்டி முத்து ராவுத்தர் தெரு கீழப்பள்ளி வாசலை சேர்ந்த சிக்கந்தர் பாஷாவின் மனைவி சன்னத் (70) என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியதில் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டதில் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்

இதுகுறித்து அவரது மகன் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி