மனநலம் பாதிக்கப்பட்ட தந்தை மாயம். மகன் புகார்.

58பார்த்தது
மனநலம் பாதிக்கப்பட்ட தந்தை மாயம். மகன் புகார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கருகாட்டன்பட்டி ரோடு, மீனாட்சி காம்பவுண்டில் வசிக்கும் மைதீன் லெப்பை மகன் சுலைமான் (50)என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 24ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று அவருக்கு மகன் ஜனாத் கனி உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து காணாமல் போனவரை போலீசார் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி