எழுமலை அருகே நர்சிங் மாணவி மாயம்.

85பார்த்தது
எழுமலை அருகே நர்சிங் மாணவி மாயம்.
மதுரை மாவட்டம் எழுமலை அருகே இளம் பெண் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் எழுமலை அருகே ஆதன்கரைபட்டியை சேர்ந்த சுவாமி ராஜ் என்பவரின் மகள் வைத்தீஸ்வரி(19) உசிலம்பட்டியில் உள்ள அன்னை நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் காலை கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே நேற்று அவரது தாய் கார்த்திகை செல்வி எழுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி