மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக அமைதி அனைத்து உரிமையையும் காக்கும் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மதுரை உசிலம்பட்டி தொகுதியில் உசிலம்பட்டி வடக்கு ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகளுடன் சேடப்பட்டி மணிமாறன் இணைந்து வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் துரோகத்தையும் அதற்கு துணை போகும் அடிமை கூட்டத்தையும் எடுத்துக் கூறி அவர்களை திமுக உறுப்பினராக சேர்க்கும் பணியில் இன்று (ஜூலை. 5) ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.