தேனி மாவட்டம் போடியில் சட்ட விரோதமாக கனிமங்கள் கொள்ளை

551பார்த்தது
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகில் கரட்டுப்பட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான முருகேசன் கல்குவாரியில் இருந்து சட்டவிரோதமாக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன.

மேற்படி சட்ட விரோத செயலுக்கு உடந்தையாக தேனி மாவட்ட கனிமவளத்துறை அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்வது இல்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி