மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மகளும் பேரனையும் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொங்கப்பட்டி பெட்ரோல் பங்க் பின்புறம் வசிக்கும் செல்வம் (56) என்பவரின் மகள் பிரேமலதா (23) மற்றும் 3 வயது பேரன் ஆகியோர் வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று செல்வம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.