தோப்பூரில் விஷம் அருந்தி வாலிபர் பலி.

74பார்த்தது
தோப்பூரில் விஷம் அருந்தி வாலிபர் பலி.
மதுரை அருகே தோப்பூரில் விஷம் அருந்தி வாலிபர் பலியானார்.

மதுரை தோப்பூர் அண்ணாதெரு இரண்டாவது தெருவை சேர்ந்த முருகேசன் மகன் சுரேஷ் (34). இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் வயிற்றுவலி வந்ததால் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குணமாகாததால் மனமுடைந்த வாலிபர் சுரேஷ் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அவருடைய மனைவி கலைச்செல்வி ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி