மதுரை திருப்பரங்குன்றம் அருகே கோவிலில் தொங்கிய மணிகளை திருடியவர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் தேவி நகரை சேர்ந்த மகாலிங்கம் (50) என்பவர் மெயின் ரோடு பகுதி விநாயகர் கோயில் நிர்வாகியாக உள்ளார். நேற்று முன்தினம் கோயிலுக்கு சென்றபோது தொங்கு விளக்கை திருடிய இருவரை பிடித்து திருநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், அவர்கள் தத்தநேரி கார்த்திக் (28)அனிதா (33), எனத் தெரிய வந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர்.