மதுரை திருப்பரங்குன்றத்தில் நேற்று இந்து முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் நேற்றும் நேற்று முன்தினம் இரண்டு தினங்கள் 144 தடை உதவி பிறப்பித்து இருந்தார் ஆர்ப்பாட்டத்தில் பொது மக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார் இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் திருப்பரங்குன்ற நகரில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் சோதனைக்கு பின்பு கோயிலுக்கு பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். நேற்று மதியம் ஒரு மணி அளவில் கோவிலிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு பாஜகவினர் வெளிய வந்தனர் அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை கைது செய்து திருடர்கள் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் நேற்று அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தியதாக 195 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக, இந்து முன்னணியைச் சேர்ந்த 195 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.